இன்றைய (08 நவம்பர் 2020) இரவு முக்கிய செய்திகள்
* கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெரும், அதனால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: அமெரிக்க துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
* தமிழகத்தில் பொது முடக்கத்துக்கு அவசியமில்லை - தலைமைச் செயலாளர் சண்முகம் விளக்கம். தமிழ்நாட்டில் கொரோனா தீவிரம் குறையவில்லை எனவும், அதேசமயம் பொது ஊரடங்கு விதிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
* கரூரில் இருந்து கோவைக்கு பேருந்தில் சென்ற செல்வராஜ் (41 வயது) என்ற பயணியிடம் கொரோனா மருந்து என மிட்டாய் கொடுத்து கொள்ளை. மிட்டாய் சாப்பிட்டு மயங்கி விழுந்த செல்வராஜிடம் இருந்து ரூ.20,000 பணம், ஏடிஎம் கார்டு, மோதிரம் உள்ளிட்டவை கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளது.
* பொது ஊரடங்கு அவசியமில்லை; கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் உள்ளூர் அளவில் கட்டுப்பாடு. கொரோனா தடுப்பூசி எப்போது வரும் என்பதை சொல்ல முடியாது! - தலைமை செயலாளர் சண்முகம் பேட்டி.
* ஜம்மு-காஷ்மீர் மாச்சில் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ஒரு கேப்டன் உள்பட 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் !
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாச்சில் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ஒரு கேப்டன் உள்பட 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும், எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் ராணுவத்தினர் இணைந்து மச்சிலி செக்டாரில் தேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
* கரூரில் இருந்து கோவை சென்ற பேருந்தில் பயணியிடம் கொரோனா மருந்து என மிட்டாய் கொடுத்து கொள்ளை.
கரூர்: கரூரில் இருந்து கோவை சென்ற பேருந்தில் பயணியிடம் கொரோனா மருந்து என மிட்டாய் கொடுத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மிட்டாயை சாப்பிட்ட பேருந்து பயணி செல்வராஜ்(41) என்பவரிடம் இருந்து ரூ.20,000 ரொக்கப் பணம், ஏ.டி.எம். கார்டு, மோதிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
* மகாராஷ்டிராவில் பட்டாசு வெடிக்க தடை: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு !
மும்பை: மகாராஷ்டிராவில் பட்டாசு வெடிக்க தடை விதித்து முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிர அரசும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
No comments