சீர்காழி அருகே தக்காளி ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்து.
காரைக்காலுக்கு தக்காளி ஏற்றிக்கொண்டு சென்ற மினி லாரி சீர்காழி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாகை தேசிய நெடுஞ்சாலையில் தேத்தாகுடி என்ற பகுதியில் நெய்வேலியில் இருந்து காரைக்காலுக்கு தக்காளி ஏற்றிக்கொண்டு சென்ற மினி லாரி எதிரே வந்த புதுச்சேரி மாநில அரசு பேருந்துக்கு வழி விட திருப்பிய போது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் தக்காளி ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்தது.
இதில், லாரியில் இருந்த ஒரு டன் எடை கொண்ட தக்காளிகள் விளைநிலங்களில் கொட்டி சேதமானது. மேலும் லாரி கவிழ்ந்ததில் விளைநிலங்களில் சம்பா நடவு பயிர் சேதமடைந்தது.
இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த நெய்வேலி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தால் சீர்காழி நாகை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து பாகசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments