Header Ads

பள்ளி திறக்கும் தமிழக அரசின் கருத்து கேட்பு கூட்டம்


✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

1. பள்ளி வளாகம்  கழிப்பறை வசதி தூய்மை  பராமரிப்பு  சுண்ணாம்பு பவுடர் தெளித்தல்

 2.பெற்றோர்கள்/மாணவர்களுக்கு சானிடைசர்/   சோப்பு போட்டு கைகளை கழுவ  வலியுறுத்தல் .

 3.உரிய சமூக இடைவெளி பின்பற்றி வகுப்பறையில் அமரவைத்தல் (வகுப்பு/நேர வாரியாக).-(பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர்களின் பணி)

3.கருத்து கேட்பு கூட்டத்தை பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் நடத்தப்பட வேண்டும் (உதவி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் துணையுடன்)

4.அதிக பெற்றோர் வருகை தந்தால் மற்றோர் அறையில்  உதவி தலைமை ஆசிரியர்(வகுப்பு ஆசிரியர்கள் துணையுடன்) கூட்டத்தை நடத்த வேண்டும்.

 கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் பெற்றார் வருகையை பதிவு செய்தல்.

கூட்ட பொருள்:

1.மருத்துவ படிப்பில் 7.5/- அரசு பள்ளி மாணவர்களுக்கு  உள் இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுதல்

2.பள்ளி திறப்பு குறித்த அரசின் அறிக்கை படித்து காண்பித்தல்(அரசின் அறிக்கை 830)

3.எதிர்வரும் நவம்பர் 16அன்று பள்ளி திறக்கும் தமிழக அரசின் முடிவுக்கு சம்மதம் தெரிவிக்க  பெற்றோர்கள் கைகளை உயர்த்தி சம்மதம் தெரிவிக்க வேண்டும். சம்மதம் தெரிவிக்கும் (கைகளை உயர்த்தும்) பெற்றோர் எண்ணிக்கையை கணக்கிடுதல்.

4.சம்மதம் தெரிவிக்காத பெற்றோரிடம்  எப்பொழுது திறக்கலாம் என கேட்டல்

5.பெரும்பான்மை பெற்றோர் கூறும் மாதம்/நாள் பதிவு செய்தல்

6. மேற்கண்ட நிகழ்வுகளை video  வாக  பதிவு செய்தல்(ஆரம்பம் முதல்)

7.மேற்கண்ட கூட்ட முடிவுகளை பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் முன்னிலையில் விவாதித்து தீர்மானமாக (மருத்துவ படிப்பு இட ஒதுக்கீட்டுக்கு நன்றி தீர்மானம், கலந்து கொண்ட பெற்றோர் எண்ணிக்கை, நவம்பர் 16 பள்ளி திறக்க ஒப்புதல் தெரிவித்தோர் எண்ணிக்கை, மறுப்பு தெரிவித்தோர் எண்ணிக்கை, எப்போழுது திறக்கலாம் என பெரும்பாலான பெற்றோர்களின் முடிவு மாதம்/நாள்)

தீர்மானங்களை உடன்(PTA) நோட்டில் பதிவு செய்து தலைமை ஆசிரியர் , பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர்கள் கையொப்பம் இட்டு  அதன் நகலை மாவட்ட கல்வி அலுவலகம்/முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி தகவல் தெரிவிக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.