இன்றைய (09 நவம்பர் 2020) இரவு முக்கிய செய்திகள்
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* உதவி பேராசிரியர்களை நியமிக்க விண்ணப்பங்களை வரவேற்று அண்ணா பல்கலை வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* ஈஸ்வரன் படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக பாண்டிச்சேரி சென்றுள்ளதாக நடிகர் சிம்பு ட்வீட்.
* தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்த்து இந்தியத் தொழிற்சங்க மையங்களின் சார்பில் 26-ம் தேதி பொது வேலை நிறுத்தம்; திமுக முழுமையான ஆதரவு; ஸ்டாலின் அறிவிப்பு!
* நேரலை செய்திகள்: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வு. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் 4,922க்கு விற்பனை. சென்னையில் ஒரு சவரன் ரூ.39,376க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.1,000 அதிகரித்துள்ளது.
* தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்த்து இந்தியத் தொழிற்சங்க மையங்களின் சார்பில் 26-ம் தேதி பொது வேலை நிறுத்தம்; திமுக முழுமையான ஆதரவு; ஸ்டாலின் அறிவிப்பு!
* மாணவர்கள்,ஆசிரியர்கள் நலனைக்கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டுவரும் அரசின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிகள் தோறும் பள்ளிகள் முழுதும் கிருமி நாசினி தெளிக்க முடிவெடுக்கப்பட்டு முதற்கட்டமாக சென்னையில் இரண்டு பள்ளிகளில் தொடங்கப்பட்டது.சென்னை உயர்நிலைப்பள்ளி கொடுங்கையூரில் கிருமி நாசினி தெளிப்பதை உதவிகல்விஅலுவர் திரு.தணிகைவேல் பார்வையிட்டார்.உடன் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தலைவர் பி.கே.இளமாறன் மற்றும் ஆசிரியர்கள்.
* சென்னையில் தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது.
* தூத்துக்குடி, விருதுநகர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* தமிழகத்தில் பொது முடக்கத்துக்கு அவசியமில்லை - தலைமைச் செயலாளர் சண்முகம் விளக்கம். தமிழ்நாட்டில் கொரோனா தீவிரம் குறையவில்லை எனவும், அதேசமயம் பொது ஊரடங்கு விதிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
* அதிமுக அரசு உட்பட யார் தடுத்தாலும் வேல் யாத்திரை தொடரும் - எல். முருகன்.
* தமிழகத்தில் பொது முடக்கத்துக்கு அவசியமில்லை - தலைமைச் செயலாளர் சண்முகம் விளக்கம். தமிழ்நாட்டில் கொரோனா தீவிரம் குறையவில்லை எனவும், அதேசமயம் பொது ஊரடங்கு விதிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
* கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி !
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெரும், அதனால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: அமெரிக்க துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
* கப்பல் போக்குவரத்துத் துறையின் பெயர் மாற்றம் - பிரதமர் நரேந்திர மோடி. இனி துறைமுகங்கள், கப்பல், நீர்வழி போக்குவரத்து துறை என மாற்றம் - பிரதமர் மோடி.
* சென்னையில் தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது.
* நீதிமன்ற உத்தரவை துளியும் பின்பற்றாத பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு ரூ.25,000 அபராதம் - ஐகோர்ட் கிளை உத்தரவு.
* கடலூர்: விருத்தாசலத்தில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் உறவினர்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை மேற்கொண்டுள்ளார். சிறைக்கைதி செல்வமுருகன் செயின் பறிப்பு வழக்கில் கைதாகி கடந்த 2-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வமுருகன் கடந்த 4-ம் தேதி உயிரிழந்தார்.
* சென்னை: வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டச் செயலர் ராஜேஷை கண்டித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. பகுதி செயலாளர்களை கலந்தாலோசிக்காமல் பதவிகளை வழங்குவதாக ராஜேஷ் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
* சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்து வரும் ரமேஷ்-சத்யா தம்பதியரின் 3 மாத குழந்தையை மர்ம நபர்கள் கடத்தியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த ரமேஷ் மனைவி குழந்தையுடன் மார்க்கெட் பகுதியிலேயே தங்கி வேலை பார்த்து வருகிறார்.
* கோவை: வால்பாறை தாய்முடி எஸ்டேட் பகுதியிலுள்ள நியாய விலை கடையை யானைகள் இடித்து சேதப்படுத்தியுள்ளது. மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு போதுமான வேட்டை தடுப்பு பணியாளர்களை வனத்துறை நியமிக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* புதுச்சேரி அடுத்த சத்தமங்கலத்தில் 5 சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்ததாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியப்பன் என்பவரது வாத்துப் பண்னையில் 6 முதல் 14 வயது வரை உள்ள 5 சிறுமிகள் பணிபுரிகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொத்தடிமைகள் போல் தங்கி 5 சிறுமிகளின் பண்ணையில் வேலை செய்துள்ளனர்.
* மதுரை: போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு போனஸ் குறைக்கப்பட்டதாக ஊழியர்கள் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தினர். மதுரை போக்குவரத்து தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். போக்குவரத்து தலைமையகத்தின் நுழைய வாயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
* ஈரோடு நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்..
* சிவகங்கை மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் கால்பிரவு ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி பதவி விலக முடிவு செய்துள்ளார். சாதி ரீதியாக பேசி தம்மை செயல்பட விடாமல் தடுப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி குற்றம் சாட்டியுள்ளார்.
* கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே மூரார்பாளையத்தில் ஜாபர்அலி என்பவர் வீட்டில் 22 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கடலூர் அருகே உறவினர் வீட்டிற்கு சென்றபோது மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
* கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே நேரழகிரி சோதனைச் சாவடியில் ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கார்நாடகாவிலிருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்த சரக்கு வாகன ஓட்டுநர் தப்பியோடியதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments