Header Ads

இன்றைய (10 நவம்பர் 2020) இரவு முக்கிய செய்திகள்


✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* பெரம்பலூர் மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 டன் பெரிய வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெங்காயம் பதுக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. செயல்படாத கோழிப்பண்ணைகளில் பெரிய வெங்காயம் பதுக்கப்பட்டிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

* ராமநாதபுரம்: பாம்பனில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக ரூ.1 கோடி மதிப்புள்ள மீன் வர்த்தகம், புதிய பாலத்திற்கான உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

* சென்னை: தனியார் தொலைக்காட்சி நிருபர் கொல்லப்பட்டதை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். குரோம்பேட்டை அரசு மருத்துவமனை முன்பாக 75-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

* கோவை: டிப்பர் லாரி மீது செம்மரக்கடத்தல் கார் மோதி 5 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த துணிக்கடை அதிபர் ஷேக் அப்துல் ஹக்கீம் உள்பட 11 பேர் கைதாகி உள்ளனர். பெங்களூரை மையமாகக் கொண்டு துணிக்கடை அதிபர் ஷேக் அப்துல் ஹக்கீம் செம்மரக்கடத்தலில் ஈடுபடுவதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

* கரூர் அரசு கலைக் கல்லூரி இளநிலை பட்டதாரி மாணவருக்கு வழங்கிய மதிப்பெண் பட்டியலில் குளறுபடி நடைபெற்றுள்ளது. செமஸ்டர் மதிப்பெண் சதவீதமும் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலிலிருந்து மதிப்பெண்ணுக்கு இடையே வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு பணியில் சேர்ந்த மாணவர் ஒருவரின் மதிப்பெண் பட்டியலை சரிப்பார்த்தபோது குளறுபடி அம்பலமாகியுள்ளது.

* மதுரை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 300 கிராம் தங்கத்தை ஏசி மெஷினில் வைத்து கடத்திவந்த திருச்சியை சேர்ந்த இளைஞரிடம் சுங்கத்துறை விசாரணை மேற்கொண்டு உள்ளது.

* புதுக்கோட்டை சார்பதிவாளர் (பொறுப்பு) சரவணன் ரூ.7,000 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் மேலும் ஒருவரும் சிக்கினார். இச்சடி பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது சரவணனை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

* திண்டுக்கல்: பழனி அடுத்த சத்திரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி இந்திரா(30) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்னவநாயக்கன்பட்டியில் உள்ள வீட்டில் இந்திரா தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கிராமங்களில் இருந்து செல்ல போக்குவரத்து வசதி குறைவாக உள்ளதால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

* சிவகங்கை: மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கால்பிரவு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ராஜினாமா செய்துள்ளார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உள்ளிட்டோர் தன்னிடம் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாக ராஜேஸ்வரி குற்றம் சாட்டியுள்ளார்.

* சென்னை: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் சென்னையில் தொடங்கியது. தனிமனித இடைவெளியுடன் சென்னையில் உள்ள பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. 9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை கூறினர்

* கோவை: வால்பாறை தாய்முடி எஸ்டேட் பகுதியிலுள்ள நியாய விலை கடையை யானைகள் இடித்து சேதப்படுத்தியுள்ளது. மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு போதுமான வேட்டை தடுப்பு பணியாளர்களை வனத்துறை நியமிக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தூத்துக்குடியில் தீபாவளியை முன்னிட்டு சிசிடிவி கேமரா பொருத்திய ரோந்து வாகன சேவையை எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் கடந்த 2 நாட்களாக அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் வணிக நிறுவனங்களுக்குச் சென்று பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். ஜவுளிக் கடைகள், பட்டாசுக் கடைகள், நடைபாதை துணி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகைபறிப்பு, பணம் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் போலீசார் தீவிர பாதுகாப்பு.

* சென்னை காஞ்சிபுரம் தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் சென்னையில் கைது.

* தேனி மாவட்டத்தில் உள்ள 222 பள்ளிகளில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெற்றோர்களின் கருத்து கேட்கப்பட்டது.

* கடலூர் சிதம்பரம் அருகே கீழ திருக்கழிப்பாலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்யவிடாமல் ஊராட்சி மன்ற துணை தலைவர் தடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார்.

 * காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* திருதணிக்காசலம் குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து.

* அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். - அமைச்சர் விஜயபாஸ்கர்.

* 45% பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க விருப்பம் :  பள்ளிகள் திறப்பது குறித்து 12-ம் தேதி முதல்வர் அறிவிப்பார். -அமைச்சர் செங்கோட்டையன்.

* சென்னை-யில் தாறுமாறாக ஓடிய மாநகர பேருந்து மோதி கிண்டி ரேஸ்கிளப் காவலாளி உயிரிழப்பு.

* மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை.

*  தமிழகத்தில் கடலோர பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 (09.11.2020 ) மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.  -வானிலை ஆய்வு மையம் தகவல்.

No comments

Powered by Blogger.