Header Ads

ஸ்ரீபெரும்புதூர் அருகே முன் பகையால் ரவுடிகளால் செய்தியாளர் வெட்டி படுகொலை.

 ✍ | -ராஜாமதிராஜ். 

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நல்லூர் கிராமத்தில் தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் மோசஸ் என்பவர் நேற்று நள்ளிரவு அதே பகுதியைச் சேர்ந்த நவமணி என்கின்ற ரவுடியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் நல்லூர் பகுதிகளில் நடைபெறும் ஏரி ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ஏற்பட்ட முன்பகை காரணமாக செய்தியாளர் மோசஸ் படுகொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

நல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரி புறம்போக்கு பகுதிகளில் ரவுடிகளால் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது அந்தவகையில் அதே பகுதியைச் சார்ந்த நவமணி என்கின்ற ரவுடி ஏரி புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளார் இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த நிலத்தில் வைக்கப்பட்டிருந்த கற்களை யாரோ பிடுங்கி எறிந்து உள்ளார்கள் அந்த கற்களை செய்தியாளர் மோசஸ் தான் பிடிங்கி எறிந்தார் என்கின்ற தகவல் நவமணி தெரியவருகிறது இதனால் ஏற்பட்ட முன்பகை காரணமாக மோசஸ் என் இரு சக்கர வாகனத்தை ஏற்கனவே உடைத்துள்ளார் அதன்பிறகு சிறைக்குச் சென்ற நவமணி தற்போது வெளியே வந்துள்ளார் இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் குடும்பத்தினரை பற்றி செய்தியாளர் மோசஸ் தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது மேலும் அப்பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை காவல்துறையிடம் தெரிவித்த காரணத்தினால் ஏற்கனவே முன்பகை இருந்த காரணத்தினாலும் நவமணி வெங்கடேஷ் விக்னேஷ் மனோஜ் ஆகிய நபர்களால் செய்தியாளர் மோசஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இதுதொடர்பாக நவமணி உள்ளிட்ட 4 நபர்கள் போலீசார் கைது செய்து உள்ளனர்.

புது நல்லூர் பகுதிகளில் ஏரி புறம்போக்கு இடங்களை தனிநபர்கள் ஆக்கிரமித்து விற்பனை செய்து வருவது அதிகரித்து வந்த வண்ணமே இருக்கிறது இதில் பெரும்பாலான நபர்கள் ரவுடிகளாகவே இருக்கிறார்கள் இன்னிலையில் ரவுடிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வைக்கப்பட்டிருந்த கற்களை மர்மநபர்கள் யாரோ பிடுங்கி எறிந்து உள்ளார்கள் அதை தனது மகன் மோசஸ் தான் செய்தார் என வதந்தியை பரப்பி இருக்கிறார்கள்,


இதை நம்பிய அப்பகுதியைச் சார்ந்த ரவுடி நவமணி என்பவன் எனது மகன் மோசஸ் மீது முன் பகையில் இருந்துள்ளான் இது தொடர்பாக ஏற்கனவே ரவுடி நவமணி எனது மகனை மிரட்டி இருக்கிறார் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என இருந்த நிலையில் சம்பந்தப்பட்ட ரவுடி ஏற்கனவே சிறையில் இருப்பதாகவும் காவல்துறையினர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருப்பதாகவும் எந்த ஒரு புகார் அளிக்க தேவையில்லை என எனது மகன் கூறியிருந்தார் இந்நிலையில் சிறையிலிருந்து வெளிவந்திருந்த நவமணி எனது மகனை வெட்டி படுகொலை செய்து இருக்கிறார் எனது மகனை படுகொலை செய்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார் அரசாங்கம் பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை என கூறினார்.

இதுகுறித்து இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறியதாவது, படுகொலை செய்யப்பட்ட மோசஸ் என் தந்தை ஞானம் என்பவரும் அப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதில் ஈடுபட்டு வந்துள்ளார் இந்நிலையில் இவர்களின் எதிர்தரப்பினர் நவமணி கும்பலுக்கும் மோசஸ் இன் தந்தை குடும்பத்தினருக்கும் ஏற்கனவே முன்பகை ஏற்பட்டுள்ளது மேலும் அவர் பகுதியில் உள்ள வெங்கடேசன் என்பவரின் குடும்பத்தினர் பற்றி மோசஸ் தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் காரணமாக நவமணி மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் இருவரும் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்தியாளரை வெட்டி கொலை செய்து இருக்கிறார்கள் கொலை நடந்த இரண்டு மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

No comments

Powered by Blogger.