Header Ads

இன்றைய (11 நவம்பர் 2020) இரவு முக்கிய செய்திகள்

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.


* அமமுக தேர்தல் பிரிவு செயலாளராக மு.சட்டமன்ற உறுப்பினர் என் ஜி பார்த்திபன் நியமனம்.

* அமமுக பொருளாளராக முன்னாள் அரசு கொறடா திருச்சி மனோகரன் நியமனம்.

* சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள 9 போலீசாருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று முதல் வழக்கு விசாரணை துவக்கம்.

* சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2000 பஸ்களுடன் இன்று 225 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மற்ற நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இன்று 900 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

* அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு மீது இன்று சிறப்பு விசாரணை நடத்துகிறது உச்சநீதிமன்றம்.

* வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்(ஐடிஏடி) கட்டாக் கிளை அலுவலகத்தை இன்று பிரதமர் திறந்து வைக்கிறார்.

* தில்லியில் கைவினைப் பொருட்களின் கண்காட்சியை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி இன்று தொடங்கி வைக்கிறார்.

* கீழ்திசை காற்று வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழக கடலோர பகுதிகளிலும், அதனையொட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை மற்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு புவியரசன் தெரிவித்துள்ளார்.

* சென்னையில் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் லிட்டர் ₨84.14-க்கும், டீசல் லிட்டர் ₨75.95-க்கும் விற்பனை.

* அமெரிக்க ராணுவ மந்திரி பதவி நீக்கம் - டிரம்ப் அதிரடி! அமெரிக்க ராணுவ மந்திரி மார்க எஸ்பரை டிரம்ப் அதிரடியாக பதவியில் இருந்து நீக்கினார்.

* பீகார் சட்டப்பேரவை தேர்தல் வெற்றி: அமித் ஷா வாழ்த்து!

* அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ள கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழுவில் ஈரோடு பெண் டாக்டர் இடம்பெற்றுள்ளார். இதனால் அவரது பூர்வீக கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

* ஜனநாயகம் எந்த அளவுக்கு வலுப்படுத்தப்படுகிறது என்பதை பீகார் மீண்டும் உலகிற்கு தெரிவித்துள்ளதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.

No comments

Powered by Blogger.