Header Ads

2021இல் மீண்டும் நம்பர் ஒன் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவார் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

✍ | -ராஜாமதிராஜ். 

இந்தியாவில் தமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக திகழ்வது போல் எடப்பாடி பழனிசாமி 2021இல் மீண்டும் நம்பர் ஒன் முதல்வராக வருவார் என  அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மறவாக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெற்று முடிந்த ஆதிதிராவிடர் மேம்பாட்டு திட்டங்களை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்

"அம்மா ஆதிதிராவிடர் குடியிருப்போர் மேம்பாட்டு திட்டம்" மூலம் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 33 பணிகள் நடைபெற்று உள்ளதாக தெரிவித்தார்.


மரவாக்காடு ஊராட்சியில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று உள்ளதாகவும் தெரிவித்தார்.


எந்த இடத்தில் எது தேவை என்பதை அறிந்து தமிழக முதலமைச்சர் செயல்படுவதால் தமிழகம் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக திகழ்வதாகவும் 2021ஆம் ஆண்டு தேர்தலிலும் எடப்பாடி பழனி சாமி நம்பர் ஒன் முதல்வராக வருவார் என அமைச்சர் காமராஜ் நம்பிக்கை  தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.