Header Ads

இரவு 9 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.


❇️✅திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.  குளத்தில் குளித்து கொண்டிருந்த சிறுமி நிசாந்தினி குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

__________

❇️✅இராமநாதபுரம்

கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை பெய்தது. ராமசாமி பட்டி, கோரைப்பள்ளம், மேல ராமநதி , காவடிபட்டி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

__________

❇️✅திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடு குறித்து காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

__________

❇️✅புதுச்சேரியில் புயல் எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்ற விசைப்படகு உரிமையாளர்கள் 54 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கடலுக்கு சென்ற காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 54 மீனவர்கள் மீது நிரவி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

__________

❇️✅திருவாரூர்: மத்திய அரசின் வேளாண் சட்ட நகல்களை எரித்து திருவாரூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே போராட்டம் நடத்தினர்.

__________

❇️✅திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வாக்குப்பதிவை உறுதிசெய்யும் கருவிகளுக்கு 41 பெட்டிகளில் மொத்தம் 2040 பேட்டரிகள் வந்தன. அவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. 

__________

❇️✅அரியலூர் மாவட்டத்தில் காரில் வந்து இரு வேறு ஊர்களில் பெண்களிடம் நகை பறிப்பு

__________

❇️✅சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் சிறப்பு விமானம் ரத்து போதிய பயணிகள் இல்லாததால் ரத்து ,  நாளை காலை விமானம் புறப்படும் என அறிவிப்பு

__________

❇️✅அரியலூர் கழிவு பொருட்களை சிமெண்ட் தயாரிப்புக்குப் பயன்படுத்தும் போது எரிக்கப்பட்டால் அவைகளில் இருந்து வெளிவரும் நச்சு தன்மையால்பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு.

அபாயகரமான கழிவுகள் இனி அரியலூர் மாவட்ட எல்லைக்குள் வரக்கூடாதென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

__________

❇️✅நெல்லை மாவட்டம் செட்டிகுளம் பகுதியில் இரு தரப்பினரிடையே தகராறு 22 வீடுகள் சேதம் நான்கு இரு சக்கர வாகனங்கள் சேதம் 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

__________

❇️✅கிருஷ்ணகிரி அணையில் உள்ள பொதுப்பணி துறை உதவி பொறியாளர் அலுவலகத்தில் கிருஷ்ணகிரி அணை பாசன விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி அணையிலிருந்து இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது

__________

❇️✅கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கொத்தக்கொண்டப்பள்ளி என்னுமிடத்தில் மருத்துவம் படிக்காமல் மாருதி மெடிக்கல் உரிமையாளர் பலருக்கும் சிகிச்சை அளித்து வருவதாக வந்த தகவலையடுத்து

மருத்துவர் ராஜுவ் காந்தி தலைமையிலான மருத்துவக்குழு மாருதி மெடிக்கல் உரிமையாளர் பிரகாஷ் என்பவரை கைது செய்து மெடிக்கலுக்கும் சீல் வைத்துள்ளனர்.

விசாரணையில் அவர் மெடிக்கல் மட்டுமே நடத்த அனுமதி பெற்று மருத்துவம் பார்த்தது தெரியவந்துள்ளது.

__________

❇️✅கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையிலான இலஞ்ச ஒழிப்பு போலிசார் மேற்க்கொண்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத 151698 ரூபாய் ரொக்கப்பணம் சிக்கியதாக இலஞ்ச ஒழிப்பு போலிசார் தகவல்

__________

❇️✅கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் 24 ஊராட்சிகளில் நடைபெறும் நூறுநாள் வேளையில் முறைகேடுகளை தடுக்க கோரியும், நாகம்பட்டி ஊராட்சியில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்ககோரியும் பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் இன்று மத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் BDO விடம் நடவடிக்கை எடுக்ககேட்டு மனு அளிக்கப்பட்டது.

__________

❇️✅சென்னை: மழை நீர் சூழ்ந்ததால்4 நாட்களுக்கு முன்பு செம்மஞ்சரி அரசு மருத்துவமனை மூடப்பட்டது. 4 நாட்களாகியும் மருத்துவமனை திறக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் அந்த மருத்துவமனையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.