Header Ads

நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்குகொரோனா காலத்தில் அரசால் உயர்த்தப்பட்ட 380 ரூபாய் சம்பளத்தை வழங்க கோரி மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

✍ | -ராஜாமதிராஜ். 


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் எதிரே CITU மற்றும் நகராட்சி ஒப்பந்த  தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மன்னார்குடி நகராட்சி யில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 290 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. 

கொரோனா காலத்தில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட 290ரூபாய் சம்பளத்தை 380 ரூபாயாக உயர்த்தி வழங்க மாவட்ட நிருவாகம் உத்தரவிட்டது.

ஆனால் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு இன்று வரை 290 ரூபாய் சம்பளம் மட்டுமே வழங்குவதை கண்டித்து சம்பளத்தை உயர்த்த கோரி கோசங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் நகர ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்க 

தலைவர் திருநாவுக்கரசு,CITU கௌரவத் தலைவர் ரகு பதி நகரத்தலைவர் பிச்சைக்கண்ணு, பூண்டி மணி ,ஜெகதீசன்,உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

No comments

Powered by Blogger.