குளிர்! -சிறுகதை (ஜெயஸ்ரீ பொன்னம்பலம்.)
குளிர்! -சிறுகதை
✍️ | ஜெயஸ்ரீ பொன்னம்பலம். (இளம் சிறுகதை எழுத்தாளர்.)
வசதிப்படைத்தவர்களுக்கு குளிர் என்பது சுகத்தை அள்ளிக் கொடுக்கிறது. ஆனால் ஏழ்மையானவர்களுக்கு சங்கடத்தை மட்டுமே கொடுக்கிறது.
நவம்பர் மாதம் என்றாலே பருவமழை தொடக்கம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
அன்று, நவம்பர் மாதம் மாலை நேரம். பருவமழை தொடக்கம் உருவெடுத்ததிருந்தது. ஈரக் காற்றுடன் இலேசாக மழை அடித்தாலும் ரோட்டோரம் இருக்கும் மக்களுக்கு வெள்ளமாகவே காட்சியளித்தது. ஏராளமானோர், நிலைப்புரியாமல், ஒதுங்கி கொள்ள இடம் கிடைத்தது என்று மரத்தடியில்க் கூட ஓடிப் போய் நின்றனர். (அவர்களுக்கு யாரும் மழை நேரத்தில் மரத்தடியில் நின்றால் ஆபத்து என்று உணர்த்தவில்லை. தொலைக்காட்சியின் செய்தியே கண்டு தெரிந்து கொள்ளவும் வசதில்லை.)
அந்த மழையில் நடுங்கி நின்றவர்களுள் பத்து வயது சிறுவனும் ஒருவன். அவள் தாய்க்கு காசநோய் என்பதால் கணவனும், உறவினர்களும் வீட்டை விட்டுத் துரத்தினர். கையில் ஒரு ரூபாய் கூட இல்லை. என்னதான் வெளியில் குளிர் அடித்தாலும், பத்து வயது சிறுவனின் பசியாற்ற முடியாத தாயாக இருப்பதை நினைத்து அவளின் தாய்மை உள்ளம் கடும் நெருப்பாய் பற்றி எரிந்தது.இறுதியாக, ரோட்டின் ஓரத்தில் அடைக்கலம் அடைந்தனர்.
அடுத்த நாள் காலை, வேளைக் கேட்டு கடை கடையாக ஏறினால்.ஆனால் கடைக்காரர்கள் அவளின் அழுக்குப் புடவை, குலைந்த தலை முடியை கண்டு வேலைத்தர மறுத்தனர்.
கோயிலுக்கு சென்று,அங்கு வெளியே தரும் பிரசாத உணவை தன் மகனுக்கு வாங்கி கொடுத்தால்.இறுதியாக ஒருக் கடைக்கு சென்று, ஐயா! எனக்கு ஒரு வேலைக் கிடைக்குமா....? என்றால். அந்தக் கடைக்காரர் அவள் முகத்தையும், அந்த சிறுவனின் முகத்தையும் சிறிது நாழிப் பார்த்துவிட்டு, "உனக்கெந்த வேலையும் இங்கு இல்லை. வேண்டுமென்றால் உன் பையனை அனுப்பு வேலைப் போட்டு தருகிறேன்", என்றார்.ஒன்றும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தால். கோயில் கிடைக்கும் பிரசாதத்தை முகம்,அன்னதானத்தையும் கொண்டு அன்று பொழுதை கழித்தனர். ரோட்டின் ஓரத்தில், தனது சேலையேக் கொண்டு தன் நெஞ்சோடு, மகனை அரவணைத்திருந்தால். அவளுக்கும் இருக்கும் நோய்க்கு சரியான சிகிச்சை எடுக்காததால்,இருமல் தொடர்ந்து வந்தது.
அப்போது, அந்த சிறுவன் தன் தாயை நோக்கி, "அம்மா! நீங்கள் கவலைக் கொள்ளாதீர்கள். நான் வேளைக்கு சென்று உங்களுக்கு மருந்து வாங்கி தர்றேன். உங்கள் உடம்பு சரியாகிவிடும், "என்றான். ரோட்டில் உடனிருந்தோரும், அவளும் கண்ணீரில் மூழ்கினார்கள். காலை விடிந்தது, தனது மகனை வேலைக்கு அனுப்ப தாய்க்கு சிறிதளவும் மனது இல்லை. ஆனால் வேறு சூழல் இன்றி, மனதைக் கல்லாக்கி தன் உடன் இருக்கும் பெரியவர்களோடு அனுப்பி வைத்தாள். இவள் அந்த ரோட்டோரத்தில் மழைச் சாரலில் சிறிது நனைந்தப்படியும் தன் மகன் இந்நேரம் என்ன செய்வான்? என்று நினைத்தப்படியும் அமர்ந்திருந்தால். இரவு நெருங்கியது, ஒரு நாள் சம்பளமாக, 70 ரூபாயைத் தன் அம்மாவின் கையில் கொடுத்தான். கண்கள் கலங்கியப்படி அந்தக் காசை அவள் வாங்கினாள். அந்தக் காசைக் கொண்டு "இருமல் மருந்து"மட்டுமே வாங்க முடிந்தது. இரவில் குளிர் இருவரையும் வாட்டியது. நடுங்கியப்படி இருவரும் படுத்திருந்தனர். சற்று நேரத்தில் மழைப் பெய்ததால், அங்கிருந்த அனைவரும் எழுந்து மூடியக் கடைகளிலும் மரத்தடியிலும் அடைக்கலம் புகுந்தனர். இரவெல்லாம் மழைப் பெய்த படி இருந்தது. அப்போது அங்கு வேகமாக சென்றக் கார் ஒன்று அவனின் தாய் மீது மழை நீரை மேலடித்து சென்றது. அதனைக் கண்ட அந்த சிறுவன் மனங்கலங்கினான்.
அடுத்த நாள் காலை, அவன் தாய்க்கு இருமல் சற்று அதிகமாகவே இருந்தது.அவன் தன் தாயிடம், "அம்மா நீங்கள் ஓய்வெடுங்கள், நான் மாலையில் விரைவாக உங்களைக் காண வருகிறேன்", என்று சொல்லி விட்டு ஆட்களோடு வேலைக்கு புறப்பட்டான். அவள் தாய் அவனை அணைத்து "முத்தம்" கொடுத்து, கண் கலங்கியப்படி, "என்னை மன்னித்து விடு. நான்,இந்த சிறு வயதில் உனக்கு இவ்வளவு சிரமத்தை அளித்து விட்டேன். நீ உன் வாழ்வில் பெரிய அளவில் வர வேண்டும். இதுதான் அம்மாவின் ஆசை, "என்று மனமுருகி பேசினால். [அவள் கொடுத்த முத்தம் கூடக் காய்ந்திருக்காது.]
மாலையில் தன் தாய்க்குப் பிடித்த மல்லிகைப் பூவை வாங்கி ஓடி வந்தான். அவள் உறங்குவதைக் கண்டு "அம்மா.....!! அம்மா....!!", என்று எழுப்பினான். அவள் எழுந்திருக்கவில்லை. மீண்டும் மீண்டும் எழுப்பினான். எந்த ஒரு அசைவும் இல்லை. பக்கத்தில் பெரியோரிடம் சென்று கூறினான். அவர்கள் பார்த்து விட்டு, அவள் இறந்துக் கிடப்பதைக் கண்டு அவனிடம் கூறினார்கள்.[ஆம், இரவில் அவள் ஈரத்தோடு இருந்ததால் அவளுக்கு,"ஜன்னி" வந்துள்ளது.] அக்கம் பக்கத்தில் இருக்கும் பெரியோர்கள் அவளின் உடலை அடக்கம் செய்ய முடிவெடுத்தனர்.
அந்த சிறுவன் தன் கையில் இருக்கும் பூவைக் கீழேப் போட்டு கதறி அழுதான். இறுதியாக அவன் வாங்கிக்கொண்டு வந்த அந்த மல்லிகைப் பூ மட்டுமே இறுதி சடங்கில் அவளோடு சென்றது.
அந்த சிறுவனின் வாழ்க்கை.....????
அந்த சிறுவனின் சூழல்,
தன் தாயின் ஆசையே நிறைவேற்ற ஆசிரமத்தில் சேர்ந்து படித்து வாழ்வில் வெற்றிப் பெற்றிருக்கலாம்.
(அல்லது)
பசியின் காரணத்தினாலும்,தனது வறுமையினாலும்;திருட்டு என்று வழி மாறிப் போயிருக்கலாம்.
கருத்து:
வீடு இருப்பவர்களுக்கே குளிர் சுகமானது.வீடற்று இருப்பவர்களுக்கோ,அது கடுமையான காலனாக உள்ளது.
அன்பான வேண்டுகோள்:
பணமிருப்பவர்கள் இந்த கடுமையான குளிர் காலத்தில் ரோட்டோரம் சிரமப்படுபவர்களுக்கு, ஓர் போர்வை துணி வாங்கி கொடுங்கள். அவர்கள், உங்கள் மூலம் குளிர் தனியட்டும்.
இப்படிக்கு,
ஜெயஸ்ரீ பொன்னம்பலம்
No comments