Header Ads

இன்றைய (30.11.2020) இரவு முக்கிய செய்திகள்


 ✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* அந்தியூர்: அந்தியூர் அருகேயுள்ள ஓசைபட்டியை சேர்ந்தவர் குருசாமி,(60), கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மதியம், டி.வி.எஸ்., மொபட்டில், ஓசைபட்டி அருகே சென்றார். பிரம்மதேசத்தை சேர்ந்த நவரசன்,(21), ஓட்டி வந்த, மாருதி ஈகோ கார், மொபட் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்தார். இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

* அந்தியூர் தாசில்தார் மாரிமுத்து தலைமையிலான வருவாய் துறையினர், நெரிஞ்சிப்பேட்டை அருகே, பவானி - மேட்டூர் சாலையில், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிராவல் மண் ஏற்றிய ஒரு டிப்பர் லாரி, அதை தொடர்ந்து ஒரு ஜே.சி.பி., வாகனம் வந்தது. சோதனை செய்த போது, கடத்திச் செல்வது தெரிய வந்தது. டிப்பர் லாரி டிரைவர் நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த முருகன்,(26), ஜே.சி.பி., ஆப்பரேட்டர் குமார்,(25), என்பதும் தெரிந்தது. டிரைவர்கள் மீது அம்மாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

* தேனி: அல்லிநகரம் டெலிபோன் நகர் ஆடிட்டர் காலனியைச் சேர்ந்தவர் பிரகாஷ் 42. இவரது வீட்டில் இருந்தபோது முன்விரோதம் காரணமாக அதேபகுதி அருண்முத்துக்குமார் 37 என்பவர், கட்டை, அரிவாளால் பிரகாஷின் தலை கைகளில் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அருண்முத்துக் குமாரை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.

* அடக்கி வாசிக்கும் பா.ஜ., பஞ்சாபில் வெற்றி கிட்டுமா?
மத்தியில் 2014ல் ஆட்சி அமைத்த பின், வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் நிலைக்கு, பா.ஜ., முன்னேறியது. ஆனால், பஞ்சாபில் மட்டும் அதன் பாச்சா பலிக்கவில்லை. அடுத்த தேர்தலை மனதில் வைத்தே, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில், மத்திய அரசு அடக்கி வாசிப்பதாக கூறப்படுகிறது.

* 'விவசாயிகள் பிரச்னையில் உள்ள முட்டுக்கட்டைகளை அகற்றி, விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்' என, கட்சித் தலைமைக்கு, மாநில பா.ஜ., நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் செயல்படும், பஞ்சாபி பாடகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பேச்சு நடத்துவதற்கு வரும்படி, விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கு, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த பிரச்னையை சமாளிப்பதன் வாயிலாகவே, பஞ்சாபில் பா.ஜ., வளர்ச்சி நிர்ணயிக்கப்பட உள்ளது. அதனால், வாய்ப்பை தவற விடுவதற்கு, பா.ஜ., தயாராக இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

* ஊரடங்கு நீட்டிப்பு: தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு மாதத்திற்க்கு டிசம்பர் 31வரை நீட்டிப்பு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு.

* 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் இணையும் சந்திரகிரணம் மதியம் 1:04 மணிக்குத் தொடங்கி மாலை 5:22 மணிக்கு முடிவடைகிறது.

இந்த சந்திர கிரகணம் அடிவானத்திற்கு கீழே இருப்பதால் இந்தியாவில் தெரியாது என்றும் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் மற்றும் அட்லாண்டிக் உள்ளிட்ட பகுதிகளில் தெரியும் என்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

* ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வந்தார் நடிகர் ரஜினிகாந்த்; பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள். ஜனவரியில் கட்சி தொடக்கம் ரஜினி திட்டவட்டம். கட்சி ஆரம்பித்தாலும் கழகங்களுடன் இல்லாத அணியில் நமது கட்சி விளங்கும் ஆலோசனைக் கூட்டத்தில் ரஜினி அறிவுரை

* சகாயம் ஐ.ஏ.எஸ்.க்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு. பாம்பன், புதுச்சேரி, நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்; தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எச்சரிக்கை!

* புதுச்சேரி: மருத்துவக் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை. சந்திரபாபு நாயுடு உட்பட 12 எம்எல்ஏக்கள் ஆந்திர சட்டசபையில் இருந்து ஒருநாள் இடைநீக்கம். ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் கைது செய்யவில்லை? சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.

* புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த ஆண்டுதான் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும். சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதிக்க வேண்டாம். பொறியியல் கல்லூரிகளைப் போலவே மருத்துவக் கல்லூரிகளும் அதிகரித்து விடும் என்பதால் அனுமதி கூடாது. -உயர்நீதிமன்ற மதுரை கிளை.

* வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுன்டன் யார்டு பகுதியில் ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு. ஆற்றை வேடிக்கை பார்க்கச் சென்ற போடி பேட்டையைச் சேர்ந்த நதியா(31), அஸ்வினி (8), நிவிதா (11) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

* கொரோனா தடுப்பூசி 100% பலன் தருவதாக அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம்  தகவல்.

* புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் 2ஆம் தேதி வடதமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை. - வானிலை ஆய்வு மையம்.

* காங்கிரஸ் நிர்வாகி ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார். முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

* ஊரடங்கு நீட்டிப்பு; தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு மாதத்திற்க்கு டிசம்பர் 31வரை நீட்டிப்பு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு.

* தளர்வுகளுடன் ஊரடங்கு டிச.31 வரை நீட்டிப்பு 

👉டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் தொடங்க அனுமதி.

👉டிசம்பர் 14ஆம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி

👉சமுதாய,அரசியல், பொழுதுபோக்கு,மத சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி

👉நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாத்தலங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதி

👉 இ-பதிவு முறை தொடர்ந்து செயல்

மற்ற மாநிலங்களில்  இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பதிவு கட்டாயம் 
(ஆந்திரா,கேரளா ,புதுச்சேரி தவிர) 

👉நீச்சல் குளம், பயிற்சிக்குசெயல்பட அனுமதி 

👉மத்திய அரசு அறிவித்திருந்த விமான போக்குவரத்துக்கு அனுமதி , வெளிநாடு விமான போக்குவரத்திற்கு அரசு அறிவித்த நெறிமுறைகளில் உடன் செயல்படும்.

No comments

Powered by Blogger.