இன்றைய முக்கிய செய்திகள்
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி பெறக் கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றி கொள்ளலாம்-அமைச்சர். www.tnpds.gov.inல் டிச.20ம் தேதி வரை குடும்ப அட்டையின் நகலினை இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீனை செய்யப்பட்டு அரிசி குடும்ப அட்டையாக மாற்ற நடவடிக்கை. - அமைச்சர் காமராஜ்.
* 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நாடுமுழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் சுங்கச் சாவடிகளைக் கடக்கும் போது பாஸ்ட் டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.
* செஞ்சி அருகே மின்சாரம் தாக்கி இறந்த சரவணன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், முதல்வர் பொதுநிவாரண நிதியில் இருந்து ரூ.6 லட்சமும் வழங்கினார்.
No comments