Header Ads

75 வயது மூதாட்டியை பாலியல் சில்மிஷம் செய்த 17 வயது சிறுவன்


✍ |  B.குமார், வாடிப்பட்டி.

மதுரை சோழவந்தான் அருகே வீட்டில் தூங்கிய 75 வயது மூதாட்டியை பாலியல் சில்மிஷம் செய்த 17 வயது சிறுவன் மூதாட்டி கூச்சலிட்டதால் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள காடு பட்டி வடக்கு தெரு பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி வீட்டில் தனிமையாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென மூதாட்டி வீட்டிற்குள் புகுந்து அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தூங்கி கொண்டிருந்த 75 வயது மூதாட்டியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

திடீரென கண் விழித்து பார்த்து கூச்சலிட்ட மூதாட்டியின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மூதாட்டியின் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கிருந்து சிறுவன் தப்பியோட முயன்றான்.

பொதுமக்கள் அச்சிறுவனை மடக்கி பிடித்து விசாரணை நடத்திய போது மூதாட்டியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் தெரிய வந்தது உடனடியாக சிறுவனை காடு பட்டி காவல் நிலையத்தில் பொதுமக்கள் சிறுவனை ஒப்படைத்தனர்.

சிறுவனிடமிருந்து ஒரு செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போலீசார் சிறுவனின் செல்போனில் ஏராளமான ஆபாச படங்கள் மெமரி கார்டில் வைத்திருந்தது தெரிய வந்தது.

75 வயது மூதாட்டியை கற்பழிக்க முயன்ற குற்றத்திற்காக அச்சிறுவனை கைது செய்த காடுபட்டி போலீசார் சிறுவனை மதுரையிலுள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

No comments

Powered by Blogger.