திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை
✍ | -ராஜாமதிராஜ்.
திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை - விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ.
மகளீர் அணி சட்டமன்ற தேர்தல் குழு அமைப்பது சார்பாக ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் 2021 வரும் சட்டமன்ற தேர்தலுக்கு மகளீர் பூத் கமிட்டி சிறப்பாக செயல்பட ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்.
நாங்கள் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கும் எதிர்க்கட்சிகளும் மற்ற கட்சிகளும் வேதனையை சொல்லி வாக்கு கேட்பார்கள் ஆட்சிக்கு வரமுடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் யாருக்கு பாதகம் சாதகம் ஆகும் என்று குறித்த கேள்விக்கு அதிமுகவின் வாக்கு வங்கியை யாராலும் பாதிப்பு ஏற்படுத்த முடியாது அதிமுக கட்சி ஆரம்பித்த பிறகு யார் யாரோ கட்சி ஆரம்பித்தார்கள் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுக வாக்கு வங்கியை யாராலும் சிதறடிக்க முடியவில்லை முடியாது.
திமுகவின் விடியலை நோக்கி நிகழ்ச்சி குறித்து கேட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் வெளிச்சத்தையே பார்க்கவில்லை என்று தான் அர்த்தம் அவர் இன்னும் இருட்டில் தான் இருக்கிறார், இருப்பார் மக்கள் அவரை இருட்டில் தான் வைத்திருப்பார்கள், திமுக காலத்தில் தான் 12 மணி நேர மின்வெட்டு இருந்தது இருண்ட மாநிலமாக ஆகியவர்கள் அவர்கள் அதிமுக கொடுத்த வெளிச்சமே போதும் என மக்கள் தீர்மானித்து விட்டார்கள்.
No comments