திண்டுக்கல்லில் சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா: ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

✍ | குமார், திண்டுக்கல்.
திண்டுக்கல் மாவட்டம் வடகாட்டுப்பட்டியில் உள்ளே ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் 12 ஆம் ஆண்டு வருடாபிஷேக மற்றும் கும்பாபிஷேகம் நிறுவனர் ராஜா தலைமையில் நேற்று (29 நவம்பர் 2020) நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிவாச்சாரியார்களால் யாக பூஜைகள், கணபதி பூஜை, விஷ்ணு பூஜை, தாத்ரேயர் பூஜை, பூர்ணாகுதியுடன் நிறைபெற்றது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசங்களின் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் பாபா சுவாமிக்கு கலச நீரை ஊற்றி கும்ப அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சுவாமியின் தேர் பவனி நடைபெற்றது. ஏழை முதியவர்களுக்கு இலவசமாக வேட்டி சேலையும் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திண்டுக்கல், சாணார்பட்டி, வடகாட்டுப்பட்டி, கோணப்பட்டி உள்ள மாவட்டம் முழுவதும், மதுரை, திருநெல்வேலி, கோவை, சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.
No comments