பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக இன்று உதயநிதி ஸ்டாலின் கட்சியாக உள்ளது
✍ | -ராஜாமதிராஜ்.
பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக இன்று உதயநிதி ஸ்டாலின் கட்சியாக உள்ளது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முன்னிலையில் இன்று மாலை அதிமுகவில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் 2021 இல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் வகையில் சிறப்பான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருவதாகவும் இதன் காரணமாக நாள்தோறும் மக்கள் ஏராளமானோர் அதிமுகவில் இணைந்து வருவதாக தெரிவித்தார்.
திமுகவில் அதிகாரப் போட்டி நடைபெற்று வருவதாகவும் எம்பி கனிமொழியை விடவும் அதிக அதிகாரம் படைத்தவராக உதயநிதி ஸ்டாலின் உருவாக்கி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் கனிமொழி எம்பி அமித்ஷாவின் கையில் அதிமுக இருப்பதாக பேசி வருவதாக தெரிவித்தார்.
பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் இன்று உதயநிதி ஸ்டாலின் கட்சியாக மாறி உள்ளதாகவும் குற்றம்சாட்டிய அமைச்சர் காமராஜ் அதிமுக, அதிமுக வாகதான் இருக்கிறது என தெரிவித்தார்.
No comments