வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பணமோசடி.
✍ | -ராஜாமதிராஜ்.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியை சோ்ந்த சாமுவேல்சுரேன் என்வா் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தன்னிடம் பயிலும் மாணவர்களின் நண்பர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். சாமுவேலின் பேச்சை உண்மை என நம்பி பவானி வா்ணபுரத்தைச்சோ்ந்த சிவராஜா மற்றும் அவரது நண்பா்கள் 6 போ் ரூ.38 லட்சத்தை சாமுவேலின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர்.
பணம் கொடுத்து நீண்ட நாட்களாகியும் சாமுவேல் யாருக்கும் வேலை வாங்கித்தரவில்லை. இந்நிலைநில் சாமுவேலிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்க அவரது வீட்டுக்கு சென்ற இளைஞர்களை சாமுவேல் மிரட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து சாமுவேலிடம் ஏமார்ந்த இளைஞர்கள் தங்களிடம் வேலை வாங்கி தருவதாக பணத்தை பெற்று மோசடி செய்ததாக சாமுவேல் மீது கோபிசெட்டிபாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்து உள்ளனா்.
No comments