மணப்பாறையில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
✍ | -ராஜாமதிராஜ்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பாரதியார் நகர்பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கு அந்த பகுதி மக்கள் ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் சம்மந்தப்பட்ட நிறுவனத்தினர் நீதிமன்ற அனுமதி பெற்று விட்டு மீண்டும் பணியை தொடங்கினர்.
இதையறிந்த மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. பின்னர் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிருந்தா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வழிவகை செய்வதாக கூறியதை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.
No comments