ஒசூரிலிருந்து கர்நாடகாவிற்கு இருமாநில பேருந்துகளின் சேவை தொடங்கியது:
✍ | -ராஜாமதிராஜ்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மாநில பேருந்துகள் மீண்டும் இயங்க துவங்கியுள்ளது. தமிழ்நாடு - கர்நாடக மாநில பேருந்து சேவைக்கு 6 நாட்களுக்கு மட்டும் இ-பாஸ் இன்றி பயணிக்க இருமாநில போக்குவரத்து கழகத்தின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே அரசு பேருந்துகள் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கர்நாடக மாநில பேருந்துகள் அம்மாநில எல்லையான அத்திப்பள்ளி வரையிலும் தமிழக மாநில பேருந்துகள் ஜூஜூவாடி வரையிலும் இயக்கப்பட்ட நிலையில் இடைப்பட்ட தூரத்திற்கு பொதுமக்கள் நடந்தும், ஆட்டோக்களில் பயணித்தும் சென்று வந்தநிலையில், ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் தமிழகத்தில் ஒசூர் பகுதிகளில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கும் அதேபோல கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கும் இரண்டு மாநில அரசு பேருந்துகள் இயக்கமானது துவங்கியுள்ளது.
ஒசூர் பகுதிகளில் தங்கியிருந்த கர்நாடக மாநில தொழிலாளிகள், பணி நிமித்தமாக கர்நாடக செல்லும் தொழிலாளர்களும் மகிழ்ச்சியுடன் பயணித்து வருகின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கையாக பயணிகள் மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments