Header Ads

இரவு முக்கிய செய்திகள்

 


✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* "பாஜக நடத்தும் வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை; பாஜக வேல் யாத்திரை செல்லும் இடங்களில் பொது மக்களிடம் வரவேற்பு இருக்காது; கர்ணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாது!" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்.

* "முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டு டெபாசிட் வாங்காதவர் புதுச்சேரி ஆளுநர்; வரலாற்றை வெட்டி சிதைப்பது புதுச்சேரி ஆளுநரின் முழுநேர வேலையாக உள்ளது; கிரண்பேடியை வேறு மாநிலத்திற்கு அல்லது டெல்லிக்கு பிரதமர் மாற்ற வேண்டும்!" -  தா.பாண்டியன் பேட்டி.

    திமுக தலைவர் ஸ்டாலின் தேவர் ஜெயந்தி விழாவில் விபூதி பூச மறுத்து முக்குலத்தோர் மக்களின் உணர்வுகளை இழிவுபடுத்திய செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும் - நடிகர் கருணாஸ்.

Engineering Counseling முடிவடைந்த நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 23-ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலை., அறிவிப்பு! நவ., 23 - பிப்., 24 வரை முதல் செமஸ்டருக்கான வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிப்பு.

சென்னை நுங்கம்பக்கத்தில் உள்ள, பார்க் நட்சத்திர ஓட்டலில், தி,மு.க., எம்.பி., திருச்சி சிவா மகன் சூர்யா ரகளை; தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார்.

மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட நாளான இன்று தமிழகம் மற்றும் பிற மாநில மக்களுக்கு குடியரசு தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகனிடம் கூடுதல் பொறுப்பாக வேளாண் துறை ஒப்படைப்பு.

* நடிகர் ரஜினிகாந்த் உடன் குருமூர்த்தி இரண்டு மணி நேரம் ஆலோசனை.

“பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் அல்ல” - 'சக்திமான்' நடிகர் முகேஷ் கண்ணா.

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் சு.வெங்கடேசன் எம்.பி! அக்.22ம் தேதி தோப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்து வீடு திரும்பினார்.

14,000 இராணுவ வீரர்கள் மற்றும் போலீஸார் நாளை முதல் பிரான்ஸ் நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் உத்தரவு. தீவிரவாத தாக்குதல்கள் அச்சுறுத்தலால் உச்சக்கட்ட பாதுகாப்பு.

No comments

Powered by Blogger.