தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை. குற்றாலம் பேரருவியில் கடும் வெள்ளப் பெருக்கு .
✍ | -ராஜாமதிராஜ்.
தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், செங்கோட்டை, கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளிலும் , மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கன மழை பெய்தது. இன்று மாலை நேரத்தில் குற்றாலம் பேரருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பாதுகாப்பு வளையத்தை கடந்து தண்ணீர் கலங்களாக கொட்டுகிறது. குற்றாலம் அருவிகளில் கொரோனா தடை நீட்டிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவிகளை கண்டு
ரசித்து செல்கின்றனர்.
No comments