திமுக வேட்டியை கட்ட திமுகவினரே பயப்படுகின்றனர். அமைச்சர் கருப்பணன் பேச்சு
✍ | -ராஜாமதிராஜ்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சலங்கபாளையத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு போனஸ் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணன் பயனாளிகளுக்கு போனஸ் தொகையை வழங்கிய பின்னர் பேசியபோது.
வரும் தேர்தலில் அனைவரும் அதிமுகவிற்க்கு வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களித்தால் பொதுமக்களுக்கு பல சலுகைகள் காத்திருக்கிறது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல நான் அமைச்சராக உள்ளபோதே கூட்டுறவு சங்கங்களின் பிரச்சனை கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும். பதவியில் இல்லாதபோது கூறினால் காரியத்தை செய்ய முடியாது.
முதல்வர் தன் உயிரைப்பற்றி கவலைப்படாமல் மக்களுக்காக மாவட்டம் தோறும் ஆய்வு செய்து வருகிறார். திமுகவினர் அவர்களின் கட்சி வேட்டியை கட்டவே பயப்படுகின்றனர். திமுகவினரே நமது முதல்வரை பாராட்டி வருகின்றனர்.திமுகவிலிருந்து அதிமுகவில் சேர தயாராக உள்ளனர். இன்னும் பல்வேறு சலுகைகள் மக்களுக்காக காத்திருக்கின்றது என்று பேசினார்.
No comments