Header Ads

மன உளைச்சலுக்கு ஆளான கல்லூரி மாணவ மாணவிகள்....!



✍ | -ராஜாமதிராஜ். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சாமி அரசினர் கலை கல்லூரியில் கடந்த ஒரு வாரமாக மாணவர்களுக்கான மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தேர்வுகளுக்கான வினா தால்களும் மாணவர்களின் கைபேசிக ளுக்கு அனுப்பப்பட்டு வீட்டிலிருந்தே தேர்வு எழுதி அதற்கான விடைத்தாள்களை கல்லூரிக்கு நேரடியாக சென்று ஆசிரியர்களிடம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அரசு கல்லூரி மாணவ மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக மன்னார்குடியில் கல்லூரிக்கு அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் ஒன்று கூடி தேர்வுகளை எழுதி வருகின்றனர்.

இதுகுறித்து மாணவ மாணவிகளிடம் கேட்டபோது நாளொன்றுக்கு காலை மற்றும் மதியம் என இரண்டு தேர்வுகள் நடத்தப்படுவதால் வீட்டில் இருந்து தேர்வு எழுதி விடைத்தாள்களை கல்லூரிக்கு வந்து ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று தேர்வினை எழுதி அந்த விடைத்தாள்களை யும் மீண்டும் கல்லூரியில் கொண்டு வந்த சமர்ப்பிப்பது பெரும் அலைச்சலும் மன உளைச்சல் ஆகவும் இருப்பதாக மாணவ மாணவிகள் தெரிவித்தனர். இந்நிலையில் போதிய பேருந்து வசதிகள் சரியான நேரத்தில் இல்லை என்றும் கிராமப்புறங்களில் இருந்து மன்னார்குடியில் உள்ள கல்லூரிக்கு வந்து செல்வதில் மாணவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதால் கல்லூரிக்கு அருகே உள்ள மைதானத்தில் மரநிழலில் அமர்ந்து தேர்வுகளை எழுதி வருவதாக மாணவிகள் தெரிவித்தனர். 

ஆன்லைன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்தப் பட்டு அவர்களுக்கான வினாத்தாள்கள் காலை 9 மணி அளவில் மாணவர்களின் கைப்பேசிகளுக்கு அனுப்பப்படுகிறது இந்நிலையில் வீட்டிலிருந்து தேர்வு எழுதி அந்த விடைத்தாள்களை கல்லூரிக்கு சமர்ப்பிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை சரி செய்து மாணவர்கள் எளிதில் தேர்வு எழுத தேவையான நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments

Powered by Blogger.