காதலை ஏற்க மறுத்த மன்னார்குடி பெண் போலீசை கண்டித்து இளைஞர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
✍ | -ராஜாமதிராஜ்.
காதலை ஏற்க மறுத்த மன்னார்குடி பெண் போலீசை கண்டித்து இளைஞர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் பூலான் மாரியை சேர்ந்தவர் பிரபு. இவர் தற்போது் மன்னார்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றும் வைதேகி என்ற பெண் காவலரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சேலத்தை சேர்ந்த பெண் தோழிகள் மூலம் பெண் காவலர் வைதேகி உடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவருக்கும் காதல் மலர்ந்தது இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்ததாக தெரிகிறது இந்நிலையில் வைதேகியின் பெற்றோர் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் இந்நிலையில் பெண் காவலர் வைதேகி பிரபுவை சந்திப்பதை நிறுத்திக்கொண்டார். வைதேகி தற்போது மன்னார்குடி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் நிலையில பெண் காவலர் வைதேகி பிரபுவின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என கோரி இன்று மன்னார்குடிக்கு வந்துள்ளார்.
மேலும் மன்னார்குடி ஹரித்ரா நதி தெப்பக்குளம் தொகுதிக்கு சென்ற பிரபு அங்கு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பிரபுவை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர் தகவலின்பேரில் மன்னார்குடி போலீசார் மருத்துவமனைக்குச் சென்று பிரபுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்பெண் காவலர் ஒருவர் இரண்டு வருடங்களாக காதலித்து வாலிபரை ஏமாற்றியதால் மனமுடைந்த வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மன்னார்குடியில் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் பிரபு தெரிவித்தார்.
No comments