தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தது தமிழக அரசு.
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* ரஜினிகாந்த் உடல்நிலையை பார்க்க வேண்டும்; அதே நேரத்தில் நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்; ஆனால் என்னை பொறுத்தவரை அவர் உடல்நிலையை பார்க்க வேண்டும்; இது குறித்து முடிவு செய்ய வேண்டியது நான் அல்ல!" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
* தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தது தமிழக அரசு. தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு. காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் நிர்ணயம்.
* அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய். விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாறுகிறது
கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் விஜய் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை பதிவு செய்தார் விஜய் கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்.
* டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும். டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33% போனஸ், 1.67% கருணைத் தொகை வழங்கப்படும் - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்.
* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு: நீலகிரி, திருப்பூரில் கொரோனா பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார்.
கோவை மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. கோவை மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது.
உக்கடம் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கவுண்டம்பாளையம் சந்திப்பில் 1 கி.மீ. நீளத்திற்கு மேம்பாலப் பணிகள் நடக்கின்றன. அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால பணிகள் ரூ.1100 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
* தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 9-ம் தேதி 12 ஆயிரம் பள்ளிகளில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3,000 உயர்நிலைப்பள்ளிகள், 3,000 மேல்நிலை பள்ளிகள், 6,000 தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளில் கருத்துக்கேட்கப்படுகிறது.
பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் நடக்கும் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெற்றோர் கருத்துக்களை கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
*
No comments