Header Ads

சுகாதாரத்துறை மருத்துவநிபுணர்கள் குழுவின் ஆலோசனைப்பெற்று பள்ளிகள் திறக்க ஆவனசெய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.


✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

சுகாதாரத்துறை மருத்துவநிபுணர்கள் குழுவின் ஆலோசனைப்பெற்று பள்ளிகள் திறக்க ஆவனசெய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். -மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை. 

பள்ளிகள் திறப்பு பெருந்தொற்று பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.பெற்றோர்களுக்கு  நம்பிக்கை யளிக்கும் வகையில் இனி அச்சப்படத்தேவையில்லை என்ற அறிவிப்பு சுகாதாரத்துறையும் மருத்துவ ஆலோசனைக்குழுவின் அறிக்கை அடிப்படையில் பள்ளிகள் திறக்க அரசு ஆவனசெய்யவேண்டும்.

பள்ளிக்கு அனுப்பினால் தன் குழந்தைக்கு தொற்று தொற்றிவிடுமோ என்ற ஒருவித பயத்தோடு இருக்கும் பெற்றோர்கள்.மறுபுறம் பொதுத்தேர்வு நெருங்கும் பயம்.  எதிர்காலத்தில் நீட்,ஜெ இ இ உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் வெற்றிப்பெற முடியுமா என்ற குழப்பநிலையே மனஉளைச்சலில் அச்சுறுத்துகின்றது.

கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையில் அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அதேநேரத்தில் பள்ளிகள் திறந்தால் மாணவர்கள் சரியான விழிப்புணர்வோடு கடைபிடிப்பார்களா என்பது கேள்விக்குறியே.

தொடர்ச்சியாக 5 மணிநேரம் முககவசம் அணிந்துகொண்டிருப்பார்களா?  தினம் ஒரு முககவசம் அணிவார்களா அல்லது தரமான முககவசம் அணிபவர்கள் சுத்தம் செய்து அணிவார்களா என்பது அச்சமே.

இந்த நெருக்கடியானச் சூழலில் பள்ளிகள் திறப்பு குறித்தும் மாணவர்கள் பாதுகாப்பு குறித்தும் சுகாதாரத்துறையின் ஆலோசனை மற்றும் மருத்துவ நிபுணர் குழுவின் உறுதியான  அறிக்கையினைப் பெற்று அரசு எடுக்கின்ற முடிவே பெற்றோர்களுக்கு நம்பிக்கையளிக்கும். குறிப்பாக கடந்த 6 மாதமாக கொரொனா தடுப்பு நடவடிக்கையாக கற்பது முடங்கிப்போயுள்ள பொதுத்தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள் நேரிடை பயிற்சி பெற்றால் மட்டுமே மீண்டுவந்து தன்னம்பிக்கையுடன் படிப்பார்கள் கல்வியாண்டில் குறைக்கப்படும் 40 % பாடத்திட்டங்கள் எவை எவையென்றும் தெரிவித்தால் மாணவர்களுக்கு கூடுதல் நம்பிக்கை ஏற்படும். ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் 5 முதல் 10 மாணவர்கள் வரை இருந்தால் சிறப்பு.

எனவே, பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினரிடம் கருத்துகேட்பது வரவேற்புக்குரியது என்றாலும், இந்நிலை புயல்,வெள்ளம், இயற்கைச் சூழலென்றால் பகுதிக்கேற்ப மாறுபடும். தங்களை பாதுகாக்கும் வழிமுறையினை அறிவர். ஆனால் கொரோனா பெருந்தொற்று எந்நேரத்தில் தொற்றும் என்ற அச்சத்தைப்போக்க சுகாதாரத்துறை மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனையுடன் அரசு அளிக்கும் உறுதிமட்டுமே மக்களுக்கு நிம்மதியளிக்கும் என்பதால் மாண்புமிகு. முதலமைச்சர் அவர்கள் பள்ளி திறப்பது குறித்து மாணவர்களின் நலன்கருதி ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.

பி.கே.இளமாறன் (மாநிலத்தலைவர்)

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.

No comments

Powered by Blogger.