மிஷன் 200 என்பதுதான் திமுக இலக்கு!
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* அதிக விடுப்பு எடுக்கும் பேராசிரியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும். - அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு.
* தமிழகத்தில் கடந்த மாதங்களில் சாலை விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 19 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
* மினி கிளினிக் திறப்பு விழாவில் பலூன் உடைத்து விளையாடியஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி: சிவகாசியில் ‘கலகல’.
* மிஷன் 200 என்பதுதான் தி மு க இலக்கு. 200க்கு கீழ் ஒரு தொகுதி கூட குறையவிடக் கூடாது. அதிமுக அமைச்சர்கள் ஒருவர் கூட ஜெயிக்ககூடாது. அதற்கான வியூகம் வகுக்கப்படுகிறது. மத்திய அரசின் அதிகார பலம், மாநில அரசின் பண பலம், இவற்றை எதிர்கொண்டு மக்களின் மனங்களை நாம் வெல்ல வேண்டும். இதுவரை திமுக 5 முறை வென்று ஆட்சியில் இருந்ததற்கு சமம் இப்போது நாம் பெறப்போகும் 6ஆவது வெற்றி. கூட்டணி யாருடன், எத்தனை தொகுதி, யார் வேட்பாளர் என்பதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். 234 தொகுதிகளிலும் கலைஞர் தான் வேட்பாளர். கட்சியில் உட்பகை மனமாச்சரியங்கள் ஆகியவற்றை விடுத்து ஒற்றுமையுடன் உதயசூரியனுக்கு உழைத்திட வேண்டும் - ஸ்டாலின்.
* டிச. 23 முதல் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 23ஆம் தேதி முதல் நேரடி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அடுத்த மாதம் 10ஆம் தேதிக்குள் 16,000 கிராம சபைக் கூட்டங்கள் நடத்த திமுக திட்டம்.
* வடகிழக்கு பருவமழை காரணமாக தென் தமிழகத்தில் 5 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு. - சென்னை வானிலை ஆய்வு மையம்.
* சட்டப் பேரவையில் நிச்சயம் ஒரு மீனவர் இருப்பார். உப்பை சுவாசித்தவரிடம் நேர்மை கொஞ்சம் அதிகமாக இருக்கும் - கமல்ஹாசன்.
* தமிழகத்தில் தேர்தல் பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம் தேர்தல் அதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்ய தமிழகம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அவர்களது சொந்த மாவட்டங்களில் நியமிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆறு மாத காலத்திற்குள் ஓய்வுபெறுவோரை தேர்தல் பணிக்கு நியமிக்க கூடாது.
* அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசியலுக்கு வருவதற்கு முன் தங்களின் குடும்பத்தினர் அனைவரது ஒரிஜினல் சொத்துபட்டியல், தற்போதுள்ள ஒரிஜினல் சொத்துபட்டியல், முன்பு செய்து வந்த தொழில், தற்போது செய்கின்ற தொழில், அதில் கிடைக்கும் வருமானம், மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட அவர்களின் குடும்பத்தினர் வருமானம் ஈட்டுகின்ற முறை, இதுவரை செலுத்திய வருமானவரி குறித்தும் ஒளிவு மறைவின்றி பொதுவெளியில் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா..?
டாக்டர் கமல்ஹாசன் அவர்களிடம் வருமான வரி குறித்து வெள்ளை அறிக்கை கேட்கும் தமிழக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கு "மக்கள் நீதி மய்யம்" மாநில செயலாளர் பகிரங்க சவால்.
* தமிழகத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருது விற்கப்படுவதாக புகார்!
* பொங்கலுக்கு அரசி குடும்பத்தாருக்கு இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
No comments