Header Ads

லீடர் தமிழின் இன்றைய முக்கிய செய்திகள்.

* காஞ்சிபுரம்: பொன்னேரி  கிளைச்சிறையில் இருந்து நடிகை சித்ரா கணவர் ஹேம்நாத் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். போலீஸ் பாதுகாப்புடன் கோட்டாட்சியர் விசாரணைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து 2 மணி நேரமாக ஹேம்நாத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


* திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.52 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பிடிபட்ட 7 பயணிகளிடம் 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


* கடலூர் சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தினர். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த விஏஓ-க்கள் போராட்டம் நடத்தினர். நாஞ்சலூர், சிவாயம் கிராம நிர்வாக அதிகாரி லட்சுமி பிரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.


* நெல்லை - திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் பாலம் குறுகி காணப்படுவதால் அடிக்கடி விபத்தை சந்தித்து வருகிறது. இந்த பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


* சென்னையின் மயிலாப்பூர், எம்.ஆர்.சி.நகர், மந்தைவெளி, அடையாறு, மெரினா, சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை கனமழை பெய்தது.


* சென்னை தேனாம்பேட்டையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராபர்ட்சன் என்பவரை கத்தியால் குத்திய எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர் கவின் கைது செய்யப்பட்டுள்ளார்.


* ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனமான ஸ்ரீபதி அசோசியேட்ஸ் நிறுவனத்தில் கடந்த 3 நாட்களாக 15-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவுப் பெற்றுள்ளது. இந்த சோதனையில் ரூ.20 கோடி ரொக்கப்பணம் மற்றும் முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


* சென்னை  டிசம்பர் 2ல் சைக்கிளிங் சென்ற நடிகர் கௌதம் கார்த்திக் இடம் செல்போன் பறித்த 2 பேர் கைது. மயிலாப்பூர் குயில் தோட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் &  பெரும்பாக்கத்தை சேர்ந்த சரத் கைது செய்யப்பட்டனர். திருட்டு செல்போனை விலைக்கு வாங்கியதாக ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த பைரூஸ்கானையும் கைது செய்தது காவல்துறை கோவை வரப்பாளையம் அருகே ஸ்ரீநகரில் யானை தாக்கியதில் வேலைக்கு சென்ற முதியவர் சோமசுந்தரம் என்பவர் உயிரிழப்பு.


* ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பத்து வனசரகங்களில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடங்கியது. டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறும் கணக்கெடுக்கும் பணியில் 300க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.


* தகவல் தொடர்புக்கான சிஎம்எஸ் 1 செயற்கைகோள் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தம்! அடுத்ததாக ஆனந்த் என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டம் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு.


* திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், திருச்சி தனியார் (மாருதி) மருத்துவமனையில் திடீர் அனுமதி. காய்ச்சல் காரணமாக அனுமதி என தகவல்.


* ஜனவரி 27ம் தேதி இரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா. அத்திப்பள்ளி வரை சசிகலாவிற்கு பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு உத்தரவு!!


* விரைவில் தி.மு.க.வில் இணைகிறார் நடிகர் சத்தியராஜ் மகள்.


* நல்ல குடும்பத்தை கெடுப்பதே கமல் வேலை. பிக் பாஸ் பார்த்தால் குடும்பங்கள் பிரிந்து விடும்- அரியலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.


* ஐடிஐ படித்தவர்களுக்கு மின்வாரியத்தில் வேலை கிடையாது - மின்வாரியம் அறிவிப்பு. 3 ஆண்டுகளுக்கு தனியார் மூலம் ஊழியர்களை தேர்வு செய்து கொள்ள மின்வாரியம் அனுமதி.

No comments

Powered by Blogger.