8 மாதங்களுக்கு பிறகு இன்று கல்லூரிகள், விடுதிகள் திறக்கப்பட்டன!
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* பெங்களூரு சென்றடைந்தார் ரஜினி!!!! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.
* யமுனை ஆற்றில் மாசு மற்றும் நுரை : நடவடிக்கை எடுக்க மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு.
* எரிசக்தி,உள்ளாட்சி, பத்திரப்பதிவு துறைகளில் பணி நியமன ஆணை வழங்கி, புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
* விவசாயிகளின் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவளித்த அரவிந்த் கெஜ்ரிவால்.
* சென்னை தலைமைச் செயலகத்தில், வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்தியக்குழுவோடு முதலமைச்சர் பழனிசாமி நாளை காலை ஆலோசனை.
* வெள்ள பாதிப்புகளுக்காக தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
* முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசுவதை திமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்.
* இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தமிழகத்தில் இன்று கல்லூரிகள் திறப்பு!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு பிறகு பல்வேறு தளர்வுகளுடன் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு இன்று கல்லூரிகள், விடுதிகள் திறக்கப்பட்டன. இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் செயல்பட தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடத்தப்பட்டு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாகக் கல்லூரிகளுக்கு வர முடியாத வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் கற்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதியில் ஓர் அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க அனுமதி.
* அய்யாக்கண்ணு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த திமுக ஐடி பிரிவு நிர்வாகி ஜெயச்சந்திரன் கைது.
* கோயம்பேடு காய்கறி சந்தை நாளை வழக்கம் போல் இயக்கும். சிறு & மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கம்.
* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கடலூர் பயணம்: கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார் முதலமைச்சர். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சேதங்களை ஆய்வு செய்கிறார். கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களையும் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்.
No comments