முக்கிய செய்திகள்
* சேலம் - சென்னை 8வழிப்பாதை திட்டத்திற்கு தடை இல்லை!! நிலம் கையகப்படுத்த வெளியிட்ட அரசாணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவைதான் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது! எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களை மக்களுக்கே திருப்பி தரவேண்டும்! சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும், மக்களிடன் கருத்துக் கேட்க வேண்டும். புதிய அரசாணை பிறப்பித்து மீண்டும் திட்டத்தை தொடரலாம்! - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
* ஹிமாச்சலப் பிரதேசத்தின் பட்டி பகுதியில் பயங்கர தீ விபத்து.
* சென்னை: சென்னையில் குடிபோதையில் பெண்ணிடம் அத்துமீறி நடந்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். எம்ஜிஆர் நகர் காவல் நிலைய தலைமைக்காவலர் ராஜு மீது வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
* சிறுநீரக சிகிச்சை நிறைவடையும் முன்பே பரோல் முடிந்ததை அடுத்து ஜோலார்பேட்டை இல்லத்தில் இருந்து புழல் சிறைக்கு புறப்பட்டார் பேரறிவாளன்!
* திமுக ஆட்சிக்கு வரவேண்டும், மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். - திமுக எம்.பி. கனிமொழி.
* சென்னை தி.நகர் தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது. 1 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பணமும், 3 சீட்டுக்கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
* ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நேற்று கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த 2 சிறுமிகள் இன்று மீண்டும் பாகிஸ்தானிற்கு பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
* பிரிட்டனில் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளும் முதல் நபராகிறார் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்!
* போதிய ரசிகர்கள் வருகை இல்லாததால் தமிழகத்தில் 300-க்கும் அதிகமான திரையரங்குகள் மீண்டும் மூடல். 8 மாதங்களுக்கு பிறகு தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகள் திறக்கப்பட்டன.
* கொடி நாளையொட்டி ரூ.1 லட்சம் வழங்கி நிதி வசூலை தொடங்கி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
* விவசாயிகளுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.
* நாளை நடக்க இருந்த CA அடிப்படை தேர்வு (தாள் - 1) ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு! நாளை நடக்க இருந்த தேர்வு, அதே தேர்வு மையத்தில் டிசம்பர் 13ம் தேதியன்று நடைபெறும் என அறிவிப்பு.
* ஆந்திராவில் 3 இடங்களில் செம்மரம் கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் உள்பட 15 பேர் கைது; கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.4.5 கோடி செம்மரங்கள் பறிமுதல்.
* பிரபல திரைப்பட நடிகை விஜயசாந்தி பாஜகவில் இணைந்தார்.
* நடிகர் சூரி அளித்த நில மோசடி புகார் மீது முறையாக விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை திட்டவட்டம். முன்னாள் டிஜிபிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாக சூரி தரப்பில் தகவல்.
* ஸ்டாலின், ராசா நாகரீகத்துடன் பேச வேண்டும் - டிடிவி தினகரன் கண்டனம்.
* பரப்பலாறு அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் எந்த நேரமும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் ஒட்டன்சத்திரம் நகராட்சி, மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை அறிவிப்பு.

* வரும் 11 முதல் 14-ம் தேதி வரை SC, ST & SCA பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு! அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தகவல்!
* 13 கிலோ கஞ்சா பறிமுதல் - இளைஞர் கைது. மாதவரம் பால்பண்ணையில், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த ஹேமந்த்குமார் (26) என்ற இளைஞரை போலீசார் கைது செய்து, 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்!
* தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் 100% பயணிகளுடன் பயணிக்க தமிழக அரசு அனுமதி!
* விவசாயிகளுக்கு ஆதரவாக ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு அறிவித்துள்ளனர்.
* ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி. நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கர்ணன் கைது செய்யப்பட்டிருந்தார்.
* குடும்ப அட்டைதாரர்கள் (ஸ்மார்ட் கார்டு) கவனத்திற்கு.. தங்கள் ஸ்மார்ட் கார்டில் போட்டோவுக்கு கீழ் PHH (or) AAY என்று இருந்தால், 5 கிலோ கொண்டைக் கடலை இலவசமாக இம்மாதம் வழங்கப்படும். NPHH என்று இருந்தால், 1 கிலோ துவரம் பருப்பு இலவசமாக நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
No comments