முக்கிய செய்திகள்
* ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அனுமதியில்லை! நிலக்கல்லில் காவலர்கள் முன்பதிவு ஆவணங்களை சரிபார்த்த பின்னரே சபரிமலைக்கு பயணிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள்! ஆகவே முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம் என்று தேவசம் போர்டு தலைவர் வாசு கேட்டுக்கொண்டுள்ளார்!
* அரசு & விவசாயிகள்!! முரண்பாடு! தொடருமா டில்லிசலோ போராட்டம்? 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதென்பது இயலாதது! மத்திய அரசு திட்டவட்டம்!! வேளாண் சட்டங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்வது என்றால் அது தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம் எனவும் விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு தெரிவிப்பு!
* திருப்பூரில் ஏர் கலப்பையுடன் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 40 பேர் கைது. திருப்பூரில் ஏர் கலப்பையுடன் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மறியல் செய்ய முயன்ற பெரியாரிய உணர்வாளர்கள் 40 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரியாரிய உணர்வாளர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
* ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரிய வழக்கு 4 வரரத்திற்கு ஒத்திவைப்பு. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரிய வழக்கு 4 வரரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்போலோ மருத்தவமனை நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 4 வாரத்திற்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமான தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறித்திய சென்னை உயர் நீதிமன்றம், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது ஐகோர்ட் கண்டனம்.
* ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகள் ரத்து ஜெயலலிதா குறித்து ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் தொடர்பான வழக்குகள் ரத்து பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனங்களை ஏற்கக்கூடிய சகிப்புத்தன்மை வேண்டும். -நீதிபதி
* திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகள் ரத்து: ஜெயலலிதா குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் தொடர்பான வழக்குகள் ரத்து. பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனங்களை ஏற்கக்கூடிய சகிப்புத்தன்மை வேண்டும்- நீதிபதி. கட்சி தலைவர்கள் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.
No comments