லீடர் தமிழ் நியூஸின் இன்றைய முக்கிய செய்திகள்
* திருச்சி: வைகுண்ட ஏகாதசியையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல்பத்து உற்சவம் பக்தர்களின்றி தொடங்கியது. ரங்கநாதர் கோயிலில் தொடங்கிய வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து, ராப்பத்து என 20 நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,065 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 99,06,165 ஆக அதிகரித்துள்ளது. 354 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,43,709 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,477 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 3,39,820 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 94,22,636 பேர் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
* சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் நிமோனியா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு தமிழக அரசு மருத்துவமனைகளில் நிமோனியா பாதிப்புக்கு 5000 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் நிமோனியாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 500க்கும் குறைவாகத்தான் இருக்கும். இந்த ஆண்டு நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது.
* டெல்லி: புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டியளித்துள்ளார். விவசாயிகளின் பரிந்துரைகளை ஏற்க, அரசு தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
* நீலகிரி: சேரங்கோடு பகுதியில் 3 பேரைக் கொன்ற காட்டு யானையை பிடிக்க 3 கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. முதுமலையில் இருந்து வசீம், பொம்மன், சுஜய் ஆகிய 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சேரங்கோடு தேயிலை தோட்டத்தில் தந்தை - மகனை நேற்று முன்தினம் காட்டு யானை தாக்கி கொன்றது. காட்டு யானையை பிடிக்க டாப்சிலிப் முகாமிலிருந்து கும்கி யானையான கலீமும் கொண்டுவரப்பட உள்ளது. ட்ரோன் கேமரா மூலம் காட்டு யானையின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்த 3 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
* சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியை சேர்ந்த மருத்துவ குழுவினர் அண்ணா பல்கலைக்கழகத்தில் சோதனை செய்கின்றனர். ஒரு மாணவருக்கு அறிகுறி இருந்ததால் விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இறுதியாண்டு படிக்கும் 700 மாணவர்களுக்கு 3 நாளில் கொரோனா பரிசோதனையை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
* டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 6வது ஊதியக்குழு பரிந்துரைப்படி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற செவிலியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
* அமராவதி: ஆந்திர மாநிலம் கர்னூல் குண்ட்லாவில் தேவாலயத்துக்கு நடந்து சென்றவர்கள் மீது லாரி மோதி 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகாலை கர்னூல் - சித்தூர் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 15 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை பாட்டூலுறு அருகே போலீசார் மடக்கி பிடித்தது.
* டெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள 1.4 லட்சம் ரயில்வே பணியிடங்களை நிரப்ப இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. 21 ரயில்வே வாரியங்கள் மூலம் நாளை முதல் 3 கட்டங்களாக தேர்வு நடைபெற உள்ளது.
* சென்னை: சென்னை சென்டரலில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் ரயில் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்டரல் - விசாகப்பட்டினம் (வண்டி எண் - 02870) விரைவு ரயில் காலை 10 மணிக்கு பதில் இன்று இரவு 9.10 மணிக்கு புறப்படும் என தெரிவித்துள்ளது.
* சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.37,032-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.18 உயர்ந்து ரூ.4,629-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 344, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 96 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. சென்செக்ஸ் 344.66 புள்ளிகள் சரிந்து 45,908.80 புள்ளிகளிலும், நிஃப்டியானது 96.45 புள்ளிகள் சரிந்து 13,461.70 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆகிறது.
* ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த 29 மீனவர்கள் மற்றும் 4 படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
* சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கடந்த 15 நாட்களில் சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183-ஆக உயர்ந்துள்ளது.
* சென்னை: டி.வி நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக கணவர் ஹேம்நாத்திடம் பெற்றோரிடம் ஆர்டிஓ விசாரணை நடத்துகிறார். சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன், தாயார் வசந்தாவிடம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ விசாரணை நடத்துகிறார். சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன், தாயார் வசந்தாவிடம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்துகிறார்.
* சென்னை: டி.வி நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக கணவர் ஹேம்நாத்திடம் பெற்றோரிடம் ஆர்டிஓ விசாரணை நடத்துகிறார். சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன், தாயார் வசந்தாவிடம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ விசாரணை நடத்துகிறார். சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன், தாயார் வசந்தாவிடம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்துகிறார்.
* மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 350 புள்ளிகள் சரிந்து 46,073 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 90 புள்ளிகள் சரிந்து 13,507 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.
* பெங்களூரு: பெங்களூருவில் போதைப்பொருள் கடத்தல் மன்னன் சிதிபெர் அம்புரோஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான அம்புரோஸூக்கு நைஜீரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளது. கொகைன் போதைப்பொருள் கடத்தலில் சர்வதேச கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. கொகைன் போதைப்பொருள் கடத்தல் கும்பல் வட்டாரத்தில் அம்புரோஸை சீஃப் என்று அழைக்கின்றனர்.
* டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடத்தப்படாது என்று நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
* தேனி: தேனியில் கர்ப்பிணி மனைவியை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சின்னமனுரில் மனைவி கற்பகவள்ளியை கொலை செய்த சுரேஷ் என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்து அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
* ஈரோடு: ஈரோட்டில் வருமானவரி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.16 கோடி சிக்கியது. ஈரோட்டில் பேருந்து, கட்டுமான நிறுவன அதிபரின் வீடு உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக வருமானவரி சோதனை நடைபெறுகிறது.
* சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐஐடி மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். முக கவசத்தை கட்டாயமாக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
* சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா டிசம்பர் 21ல் தொடங்கி 31 வரை 10 நாட்களுக்கு நடக்கிறது. நடராஜர் கோயிலின் தேரோட்டம் டிசம்பர் 29ஆம் தேதியும், ஆருத்ரா தரிசனம் டிசம்பர் 30ஆம் தேதியும் நடக்கவுள்ளது.
* புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,550-ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
* டெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை மேலும் ரூ.50 உயர்ந்துள்ளது. விலை உயர்வை அடுத்து சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710ஆக அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களுக்குள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.100 உயர்த்தியுள்ளது.
* நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பைத்துல்மால் நகரைச் சேர்ந்த மகா வைகுண்டம்(25), மனைவி ஹரிசுழந்தாள்(25) ஆகியோர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவையில் சபாநாயகரை வலுக்கட்டாயமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருக்கையில் இருந்து சபாநாயகரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதால் பெரும் அமளி ஏற்பட்டது.
* டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* கும்பகோணம்: தனது மகன்களை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றதால் தாய் தற்கொலை முயற்சி செய்து கொண்டுள்ளார். பருத்தி குடியை சேர்ந்த காசி அம்மாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்கொலைக்கு முயன்ற காசி அம்மாள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
* சென்னை: உலகின் சிறந்த மாநிலமாக தமிழகம் மாறவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: பீகாருடன் ஒப்பிடும்போது தமிழகம் முன்னிலையில் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
* டெல்லி: காப்பகங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்விக்கான வசதியை செய்துதர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காப்பகங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்விக்கு தேவையான உபகரணங்களை தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments