லீடர் தமிழின் இன்றைய முக்கிய செய்திகள்
* சென்னை ஐஐடியில் மேலும் 79பேருக்கு கொரோனோ தொற்று. இது வரை பாதிக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை 183ஆக உயர்வு.
* மீண்டும் அரங்கேறி உள்ளது பத்திரப்பதிவு மோசடி!! பத்திரப் பதிவுத் துறையில் போலி ரசீது மூலம் கோவை மண்டலத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் தமிழக அரசின் வருவாய் மோசடி!! இதை விசாரிக்க கூடுதல் ஐஜி தலைமையில் கமிட்டி அமைத்து பத்திரப்பதிவு துறை ஐஜி உத்தரவு!!
* வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் சோதனை.
* சென்னையில் டாஸ்மாக் கடைகளில் நேற்று நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து சென்னை டாஸ்மாக் மேலாளரும் வேலூர் சரக சிறைத்துறை டிஐஜியின் கணவருமான முருகன் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக வேலூரில் முருகன்-ஜெயபாரதியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
* கடந்த 3மாதங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனைகளில் 33 அரசு ஊழியர்கள் கைது: தமிழகம் முழுவதும் 127 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது. கடந்த 3மாதங்களில் ரூ6.96 கோடி கணக்கில் காட்டாத பணம் பறிமுதல். லஞ்சம் வாங்கியது தொடர்பாக தமிழகத்தில் 33அரசு ஊழியர்கள் கைது-லஞ்ச ஒழிப்புத்துறை.
புகாரின் பேரில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.62.82 லட்சமும், திடீர் சோதனைகளில் ரூ.6.96 கோடியும் பறிமுதல். 7.2 கிலோ தங்கம், 9.8கிலோ வெள்ளி, 10.52காரட் வைரமும் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை.
*
No comments