இன்றைய முக்கிய செய்திகள்
* மதுரையில் 21 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர் கைது - மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம் தகவல். மதுரை அழகப்பா நகரை சேர்ந்த தொழிலதிபர் கனக ரத்தினம், போலி ரசீதுகளை சமர்ப்பித்து மோசடி. போலியான ரசீதுகளை சமர்ப்பித்து ஜிஎஸ்டி செலுத்தாமல் ரூ. 21 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புகார். குற்றம் உறுதியானதால் தொழிலதிபர் கனக ரத்தினம் கைது - மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம். மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு.
* வரும் 28 ஆம் தேதி மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை. இங்கிலாந்திலிருந்து புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் முக்கிய ஆலோசனை. தமிழகத்தில் நோய் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை.
* தமிழகத்தில் 2021-ல் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் கொரோனா இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் பார்வையாளர்களாக பங்கேற்பவர்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* அதிமுக மக்களுக்கு கொடுக்கும் ரூ.2500யை கொள்ளையடித்த பணம் என கூறுபவர்கள் ரூ.6000 கொடுக்கிறார்களே அது எங்கே கொள்ளையடித்த பணம் அமைச்சர் சிவி.சண்முகம் #பாஜகவுக்கு கேள்வி.
* கருணாநிதி மட்டும்தான் என்னுடைய அரசியல் ஆசான் - நடிகை குஷ்பு.
* காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில், 300 சவரன் நகை திருட்டு போன விவகாரத்தில், 2 போலீசார் கைது.
No comments